ரூ.12 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா நயன்தாரா?


ரூ.12 கோடியாக சம்பளத்தை உயர்த்தினாரா நயன்தாரா?
x
தினத்தந்தி 3 April 2024 2:15 PM GMT (Updated: 3 April 2024 2:16 PM GMT)

தமிழ், தெலுங்கில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சென்னை,

சினிமாவில் சமீபகாலமாக கதாநாயகிகளை முதன்மைப்படுத்தி அதிக படங்கள் வருகின்றன. இந்த படங்கள் கதாநாயகர்களுக்கு இணையாக வசூலும் குவிக்கின்றன. இதனால் நடிகைகள் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறார்கள்.

தமிழ், தெலுங்கில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் ஷாருக்கானின் 'ஜவான்' படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது.

தற்போது 'மண்ணாங்கட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். துரை செந்தில்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களும் கைவசம் உள்ளன. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ரூ.5 கோடி, ரூ.6 கோடி என்று சம்பளம் பெற்றார். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தினார்.

சமீபத்தில் புதிய படத்தில் நடிக்க இயக்குனர் ஒருவர் அணுகியபோது ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக வலைதளத்தில் தகவல் பரவி உள்ளது.


Next Story