கிரிக்கெட் வீரரை மணக்கும் பூஜா ஹெக்டே?


கிரிக்கெட் வீரரை மணக்கும் பூஜா ஹெக்டே?
x

மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று இந்தி இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.

தமிழில் முகமூடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பூஜா ஹெக்டேவுக்கு தற்போது 32 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன்பு சல்மான்கான் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்த கிசிகி பாய் கிசிகி ஜான் படம் திரைக்கு வந்தது. அப்போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. அதனை பூஜா ஹெக்டே மறுத்தார்.

தற்போது மீண்டும் பூஜா ஹெக்டே காதல் குறித்து இந்தி இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனாலும் கிரிக்கெட் வீரர் பெயர் விவரம் வெளியாகவில்லை. இந்த தகவலுக்கு பூஜா ஹெக்டே மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story