பிரபல நடிகர் கைது


பிரபல நடிகர் கைது
x

மும்பை விமான நிலையத்தில் வைத்து பிரபல நடிகர் கமால் கானை போலீசார் திடீரென்று கைது செய்தனர்.

பிரபல இந்தி நடிகர் கமால் ஆர். கான் சமூக வலைத்தளத்தில் இந்தி நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்சனா படத்தில் அறிமுகமானபோது அவரது தோற்றத்தை கேலி செய்து பதிவு வெளியிட்டார். ஆனால் அந்த்ரங்கி ரே படத்தில் தனுஷ் நடிப்பை பாராட்டினார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து அவதூறு பதிவு வெளியிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் நீக்கினார்.

இந்த நிலையில் கமால் கானை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் திடீரென்று கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். கமால் கான் பதிவிட்ட அவதூறு கருத்துக்கு எதிராக யுவசேனா அமைப்பு சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எந்த சர்ச்சை கருத்துக்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை.

மறைந்த நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான்கான் குறித்து அவதூறாக பேசியதாக கமால் கான் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story