50 வயதில் தந்தையான பிரபுதேவா நெகிழ்ச்சி


50 வயதில் தந்தையான பிரபுதேவா நெகிழ்ச்சி
x

நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஏற்கனவே தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் மும்பையை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் ஹிமானி சிங்குடன் காதல் மலர்ந்ததாகவும் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாயின.

ஆனாலும் திருமணத்தை உறுதிப்படுத்தாமலேயே இருந்தார். சமீபத்தில் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அப்போதுதான் ஹிமானி சிங்கை வெளி உலகுக்கு தெரிய வந்தது.

சில தினங்களுக்கு முன்பு ஹிமானி சிங் மூலம் பிரபுதேவாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கும் தகவல் வெளியானது. குழந்தை பிறந்தது குறித்தும் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்த பிரபுதேவா தற்போது அதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா நெகிழ்ச்சியோடு அளித்துள்ள பேட்டியில், "ஆமாம். குழந்தை பிறந்தது உண்மைதான். நான் 50-வது வயதில் மீண்டும் தந்தையாகி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளது. இந்த குழந்தை எங்கள் வம்சத்தில் பிறந்துள்ள முதல் பெண் குழந்தை. எனது வேலைகளை குறைத்து விட்டேன். எனது தொழிலில் நிறைவாக நிறைய செய்து இருக்கிறேன். இனிமேல் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடிவு செய்துள்ளேன்'' என்றார்.

1 More update

Next Story