சினிமாவில் 40 ஆண்டுகள்... மீனாவை வாழ்த்திய ரஜினி


சினிமாவில் 40 ஆண்டுகள்... மீனாவை வாழ்த்திய ரஜினி
x

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் மீனா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உளிட்ட பலருடன் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மீனா சினிமா துறைக்கு வந்து 40 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் சரத்குமார், நாசர், பிரபுதேவா, பிரசன்னா, இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் போனிகபூர், தாணு, நடிகைகள் ரோஜா, ராதிகா, சினேகா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

1 More update

Next Story