"ராணுவத்தில் சேர்ந்து போராட தயார்" - இஸ்ரேல் நடிகை பரபரப்பு பேட்டி


ராணுவத்தில் சேர்ந்து போராட தயார் - இஸ்ரேல் நடிகை பரபரப்பு பேட்டி
x

ஹமாசுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் ராணுவத்தில் சேரவும் நான் தயாராக இருக்கிறேன் என்று இஸ்ரேல் பிரபல நடிகை ரோனா லீ ஷிமோன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த போருக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் போர் குறித்து அந்த நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ரோனா லீ ஷிமோன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் போர் தொடுத்துள்ளது கண்டனத்திற்கு உரியது. ஹமாசுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் ராணுவத்தில் சேரவும் நான் தயாராக இருக்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்பை பார்த்து கொதித்துப் போய் தான் இந்த முடிவை எடுத்தேன்.இஸ்ரேலை வெற்றி பெற செய்வதற்காக என் சக்திக்குட்பட்டு எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன். அதேபோல ஹமாஸ் தாக்குதலை கண்டித்து இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற இந்தியா உள்ளிட்ட நட்புறவு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நாங்கள் யுத்தத்தில் இருக்கிறோம். இந்த யுத்தத்தில் நாங்கள் தான் ஜெயிப்போம். பிணைய கைதிகளை பத்திரமாக மீட்போம்.

இந்த யுத்தம் மேலும் கொடூரமானதாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்காமல் இருப்பதற்கு எங்கள் நாடு உரிய நடவடிக்கை எடுக்கும்'', என்று தெரிவித்தார்.


Next Story