பணத்தை திருப்பி தர மறுப்பு... சுதீப் மீது இன்னொரு தயாரிப்பாளர் புகார்


பணத்தை திருப்பி தர மறுப்பு... சுதீப் மீது இன்னொரு தயாரிப்பாளர் புகார்
x

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப், தமிழில் விஜய்யுடன் 'புலி' மற்றும் 'நான் ஈ', 'முடிஞ்சா இவன புடி' படங்களிலும் நடித்து இருக்கிறார். சுதீப் புதிய படத்தில் நடிக்க தன்னிடம் ரூ.9 கோடி வாங்கிவிட்டு கால்ஷீட்டும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கன்னட தயாரிப்பாளர் எம்.என்.குமார் புகார் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த சுதீப் ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு எம்.என்.குமாருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் சுதீப் மீது எச்.ஏ.ரகுமான் என்ற இன்னொரு கன்னட தயாரிப்பாளரும் புகார் தெரிவித்து உள்ளார். இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களை தயாரித்துள்ளார். சுதீப்பை வைத்தும் படங்கள் எடுத்துள்ளார்.

அவர் கூறும்போது "நான் சுதீப்பை வைத்து படங்கள் எடுக்க அவரது ஆலோசனையின் பேரில் ரூ.30 லட்சம் கொடுத்து சில இந்தி படங்களின் உரிமையை வாங்கினேன். சுதீப் நடிக்க அந்த படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதற்காக சுதீப்புக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன். அதில் கொஞ்ச பணம் வந்தது. மீதி பணத்தை திருப்பி தரவில்லை. நான் தற்போது பண கஷ்டத்தில் இருக்கிறேன். என்னிடம் வாங்கிய பணத்தை சுதீப் தரவேண்டும்'' என்றார்.

1 More update

Next Story