எனக்கு எதிராக வதந்திகள் - நடிகை தமன்னா


எனக்கு எதிராக வதந்திகள் - நடிகை தமன்னா
x

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார். ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அரண்மனை 4-ம் பாகம் பேய் படத்திலும் நடிக்க இருக்கிறார். தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் வருகின்றன. இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் பரவி வருகின்றன.

இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு எதிராக நிறைய வதந்திகள் வருகின்றன. வரவர ஒவ்வொரு விஷயத்திலுமே எதிர்மறைகள் அதிமாகிவிட்டன. வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னை தென்னிந்திய ரசிகர்கள் மில்க் பியூட்டி என்கின்றனர். எனது உடல் நிறம் காரணமாக அப்படி அழைக்கிறார்கள். ரசிகர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வேன். அவர்களிடம் இருந்து நிறைய அன்பை பெற்று இருக்கிறேன்" என்றார்.


Next Story