பொதுமக்களுக்கு இலவசமாக 6 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் சரத்குமார்


பொதுமக்களுக்கு இலவசமாக 6 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் சரத்குமார்
x

நடிகர் சரத்குமார் தனது இல்லத்தில் வைத்திருந்த 6 ஆயிரம் புத்தகங்களை பொது மக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க முடிவு செய்துள்ளார். தினமும் வீட்டின் முன்னால் புத்தங்களை மேஜையில் காட்சிக்கு வைத்துள்ளார். அவற்றை பொதுமக்கள் பார்த்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, "நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6 ஆயிரம் புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்த புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று எண்ணினேன்.

என்னிடம் உள்ள இந்த புத்தகங்களை நூலகத்தில் கொடுத்து விடலாம் என்று சொன்னார்கள், சிலர் விற்று விடலாம் என்று கூறினார்கள். இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தங்களை வைத்திருக்கிறேன்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் புத்தக வாசிப்பு குறைந்துள்ளது. புத்தக வாசிப்பை மேலும் முன்னெடுத்து செல்லவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்'' என்றார்.

1 More update

Next Story