விரைவில் படப்பிடிப்பு... படமாகும் கங்குலி வாழ்க்கை கதை - ரன்பீர் கபூர் நடிப்பாரா?


விரைவில் படப்பிடிப்பு... படமாகும் கங்குலி வாழ்க்கை கதை - ரன்பீர் கபூர் நடிப்பாரா?
x

கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கையையும் படமாக எடுக்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக யூகமான தகவல்கள் பரவின.

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக வந்துள்ளது. சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையையும் ஆவண படமாக எடுத்து வெளியிட்டனர். பெண்கள் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிதாலி ராஜ் வாழ்க்கையும் படமானது. இதுபோல் கிரிக்கெட் வீரர் கங்குலி வாழ்க்கையையும் படமாக எடுக்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

கங்குலியும், "எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க ஒப்புதல் அளித்துள்ளேன்'' என்றார். திரைக்கதை எழுதும் பணியை முடித்துள்ளனர்.

இந்த படத்தில் கங்குலி வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக யூகமான தகவல்கள் பரவின. தற்போது கங்குலியை ரன்பீர் கபூர் நேரில் சென்று சந்தித்ததாகவும் எனவே அவர் நடிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது.

ஆனால் படக்குழுவினர் தரப்பில் நடிகர் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் கங்குலியாக நடிப்பது யார் என்பதை அறிவிப்போம் என்றனர். படப்பிடிப்பை விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கிறது.

கங்குலி 2000-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் வல்லவரான அவர் ஏராளமான சிக்சர், பவுண்டரிகள், சதங்கள் அடித்து கவனம் பெற்றார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் இந்திய அணி 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 வெற்றிகளை பெற்றுள்ளது.


Next Story