'வாடிவாசல்' இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக இருக்கும் - இயக்குநர் மிஷ்கின்


வாடிவாசல் இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக இருக்கும் - இயக்குநர் மிஷ்கின்
x

‘வாடிவாசல்’ நாவலிலிருந்து அவர் படமாக்கவுள்ள பகுதியை பகிர்ந்தார். அதை இந்தியாவில் வரப்போகிற மிகச்சிறந்த படமாக பார்க்கிறேன் என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார்.

சென்னை,

"வாடிவாசல் நாவலில் திரைப்படமாகும் அந்தப் பகுதியை மட்டும் வெற்றிமாறன் எனக்குச் சொன்னார். இந்தியாவின் மிகப்பெரியப் படைப்பாக 'வாடிவாசல்' திரைப்படம் இருக்கும். சூர்யா மிகச் சிறந்த நடிகர். இப்படத்துக்குப் பிறகு அவர் ஒரு லெஜெண்டாகிவிடுவார். வெற்றிமாறன் அப்படியான ஒரு படத்தை எடுக்கப் போகிறார்" என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற 'The Proof' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "இளையராஜா மிகப்பெரிய லெஜெண்ட். தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். அது தனுஷுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. ராஜாவாக வேடம் போடுகிறார். அது யாருக்கும் கிடைக்காது.

படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறீர்களா? விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறீர்களா? என கேட்டால் நான் விஜய் சேதுபதி என்று தான் சொல்வேன். அற்புதமான நடிகர் அவர்.

அண்மையில் வெற்றிமாறனை சந்தித்துப் பேசினேன். 'வாடிவாசல்' படம் குறித்து கேட்டேன். 'வாடிவாசல்' நாவலில் திரைப்படமாகும் அந்தப் பகுதியை மட்டும் எனக்குச் சொன்னார். இந்தியாவின் மிகப்பெரியப் படைப்பாக 'வாடிவாசல்' திரைப்படம் இருக்கும். சூர்யா மிகச் சிறந்த நடிகர்.

இப்படத்துக்குப் பிறகு அவர் ஒரு லெஜெண்டாகிவிடுவார். வெற்றிமாறன் அப்படியான ஒரு படத்தை எடுக்கப் போகிறார். கோயிலுக்கு போகாதீர்கள் சினிமா பாருங்கள். கோயிலுக்குச் சென்றால் பாவம் பண்ணிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கூறுவோம். ஆனால் சினிமா உங்களை சிரிக்க வைக்கும்" என்றார்.


Next Story