"இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் "மிக்ஜம் புயலின் போது பாட்டு பாடி ரசித்த நடிகை...!


இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் மிக்ஜம் புயலின் போது பாட்டு பாடி ரசித்த நடிகை...!
x

'விக்ரம்' திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார்.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கிய ஷிவானி, சரவணன் மீனாட்சி 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் இவர் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 40 போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியப்படமான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார்.

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும், விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்திலும், ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க படத்தில் ஒரு பாடலுக்கும் ஷிவானி நடித்தார். இவர் கடைசியாக பம்பர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான 'மனசுக்குள் ஒரு புயல்..' என்கிற பாடலை இணைத்து மிக்ஜம் புயலின் போது மழைச்சாரலில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷிவானி பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே…

அதன் பெயர்தான் என்ன… இந்தப் புயல் இன்று கரை கடந்தால்…

இன்னும் என்னென்ன ஆகும்…

என்னென்ன ஆகும்… என பாடல் ஒலிக்கிறது.


Next Story