இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு


இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
x
தினத்தந்தி 29 Oct 2023 6:32 AM GMT (Updated: 29 Oct 2023 6:34 AM GMT)

இந்தியன் - 2 படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.

சென்னை,

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் பட பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்த படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் மகேஷ் நாராயணன் படம் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கினார் கமல்.

இந்த நிலையில் இந்தியன் - 2 படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


Next Story