தோனி தயாரிக்கும் படம்


தோனி தயாரிக்கும் படம்
x

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'எல் ஜி எம்'. இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும் இவானா நாயகியாகவும் நடிக்கின்றனர். நதியா, யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி டைரக்டு செய்துள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் தயாரிப்பு குழுவினர் கூறும்போது, 'எல் ஜி எம்' படப்பிடிப்பு நிறைவடைந்ததை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம். படப்பிடிப்பு தொடங்கிய நாட்களில் இருந்து முடிவது வரை முழு செயல்முறையும் விரிவான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது. படம் நன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சுவாரசியமான திரைக்கதை மற்றும் உணர்வுகளும், நகைச்சுவையும் கலந்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை 'எல் ஜி எம்' பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்'' என்றனர்.


Next Story