விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது


விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது
x
தினத்தந்தி 16 Jan 2024 5:21 PM GMT (Updated: 17 Jan 2024 11:22 AM GMT)

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மகாராஜா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.இந்நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'மகாராஜா' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story