அடுத்த மாதம் தொடங்குகிறது... அஜித்குமாரின் 62-வது படத்தின் படப்பிடிப்பு


அடுத்த மாதம் தொடங்குகிறது... அஜித்குமாரின் 62-வது படத்தின் படப்பிடிப்பு
x

விக்னேஷ் சிவன் டைரக்டு செய்யும் அஜித்தின் 62-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் நடித்த 'துணிவு' படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இது அஜித்துக்கு 62-வது படம். அடுத்த மாதம் (பிப்ரவரி) படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவும் வழக்கமான அதிரடி சண்டை படமாக இருக்கும் என்று தெரிகிறது. விக்னேஷ் சிவன் ஏற்கனவே போடா போடி, நானும் ரவுடிதான். காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அஜித்குமார் ஜோடியாக நடிக்க நயன்தாரா, திரிஷா ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. தற்போது ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருகிறார்கள். ஏற்கனவே 2000-ம் ஆண்டில் வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். இன்னொரு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேசை அணுகி உள்ளனர். வில்லனாக அரவிந்தசாமி நடிக்கிறார்.


Next Story