'லியோ' திரைப்படத்தின் 'நா ரெடி' வீடியோ பாடல் நாளை வெளியாகிறது


லியோ திரைப்படத்தின் நா ரெடி வீடியோ பாடல் நாளை வெளியாகிறது
x

லியோ திரைப்படத்தின் 25வது நாள் சாதனை போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்ததால் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும் இப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும், வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லியோ திரைப்படத்தின் 25வது நாள் சாதனை போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. தற்போது 'லியோ' திரைப்படத்தின் 'நா ரெடி' வீடியோ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story