திறமையானவர்களாக இருக்கிறார்கள்... இளம் நடிகைகளை பாராட்டிய குஷ்பு


திறமையானவர்களாக இருக்கிறார்கள்... இளம் நடிகைகளை பாராட்டிய குஷ்பு
x

குஷ்பு தெலுங்கில் தயாராகி உள்ள ராமபாணம் படத்தில் கோபிசந்துடன் நடித்து இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது. படத்தை விளம்பரப்படுத்த ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு அளித்த பேட்டியில், "தற்போதைய இளம் நடிகர் நடிகைகள் திறமையானவர்களாக இருக்கிறார்கள். நானே இப்போதைய தலைமுறை நடிகைகளிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன். பாரதிராஜா, கே.பாலசந்தர், பி.வாசு, தெலுங்கில் ஜந்தியாலா, ராகவேந்திர ராவ், கோபால் ரெட்டி போன்ற மிகச் சிறந்த இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். எனது கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் நன்றாக இல்லாவிட்டாலும் அந்த கிரெடிட் முழுவதும் இயக்குனர்களுடையதுதான். ஏனென்றால் அவர்கள் சொன்னபடி நான் செய்தேன்.

இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நடிப்பு தொழிலை விரும்பி செய்வதுதான். அதுதான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறது. ரசிகர்கள் சினிமாவை பார்க்கும் கோணமும் ரசனையும் மாறிவிட்டது. அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு பிடிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதனால்தான் குறைந்த படங்களில் வருகிறேன். விஜய் ஹீரோவாக நடித்த வாரிசு படத்தில் என் கதாபாத்திரம் 18 நிமிடங்கள்தான். ஆனால் படத்தின் நீளம் அதிகமானதால் நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள்'' என்றார்.

1 More update

Next Story