சம்பளத்தை உயர்த்திய திரிஷா


சம்பளத்தை உயர்த்திய திரிஷா
x

நடிகை திரிஷா சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும், இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

திரிஷா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த படங்கள் கை கொடுக்காததால் சினிமா வாழ்க்கை அவருக்கு இறங்கு முகமாகவே இருந்தது. புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு திரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்துக்கு சென்று இருக்கிறது. அந்த படத்தில் திரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தற்போது திரிஷாவுக்கு படவாய்ப்புகள் மளமளவென குவிகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில் சம்பளத்தை திரிஷா உயர்த்திவிட்டதாகவும், இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வாங்கி வந்த அவர், தற்போது ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல் பரவி உள்ளது.

1 More update

Next Story