திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை கவுசல்யா விளக்கம்


திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை கவுசல்யா விளக்கம்
x

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் கவுசல்யா. 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'பூவேலி', 'நேருக்கு நேர்', 'ஜாலி', 'பிரியமுடன்', 'சொல்லாமலே', 'உன்னுடன்', 'வானத்தைப்போல', 'ஜேம்ஸ்பாண்ட்', 'மனதை திருடி விட்டாய்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கவுசல்யாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதுகுறித்து கவுசல்யா கூறும்போது, ''நான் திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனாலும் திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கும் அளவுக்கு சரியான நபரை சந்திக்கவில்லை. ஒருவர் என் வாழ்க்கையில் வந்தார். அந்த உறவும் முறிந்துவிட்டது.

நான் எதிர்பார்க்கும் ஒருவரை சந்தித்து இருந்தால் நிச்சயம் திருமணம் செய்து இருப்பேன். நான் பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்ததும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணம். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அவர்களை பிரிந்து என்னாலும் இருக்க முடியாது.

நான் பிசியாக நடித்தபோது நரம்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டது. இதற்காக நிறைய மருந்துகள் சாப்பிட்டதால் உடல் எடை கூடிவிட்டது. மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் உள்ளது. விஜய்யுடன் நடித்த 'பிரியமுடன்' எனக்கு மிகவும் பிடித்த படம்'' என்றார்.

1 More update

Next Story