பெரிய நடிகராக மாற உழைக்கிறேன் -சந்தானம்


பெரிய நடிகராக மாற உழைக்கிறேன் -சந்தானம்
x

மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது நல்லது

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்துள்ள டி.டி ரிட்டர்ன்ஸ் படம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து சந்தானம் அளித்துள்ள பேட்டியில், "நான் இப்போது பெரிய நடிகர்களுக்கு இணையாக இல்லை. ஆனாலும் அந்த தகுதியை அடைவதற்காக உழைத்துக்கொண்டு இருக்கிறேன். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க கவனம் செலுத்துகிறேன். இன்னும் சில வெற்றி படங்களில் நடித்த பிறகு பெரிய நடிகர்களுக்கு இணையான இடத்தை பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்தபோது கவலை இல்லாமல் இருந்தேன். கதாநாயகன் ஆன பிறகு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. மீண்டும் நல்ல கதைகள் அமைந்தால் பெரிய நடிகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

சினிமாவில் மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற காட்சிகளை இயக்குனர்கள் தவிர்ப்பது நல்லது'' என்றார்.


Next Story