நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு


நதியாவுடன் இணைந்து நடிக்கும் யோகிபாபு
x

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் புதிய படத்தில் நதியாவுடன், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்து நடிக்கிறார்.

தமிழில் 1985-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'பூவே பூச்சூடவா' படம் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நதியா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் லண்டனில் குடியேறினார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்திர வேடங்களில் நடித்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மா வேடத்தில் வந்தார். கடைசியாக தமிழில் 2009-ல் வெளியான 'பட்டாளம்' படத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஜோடியாக நடிக்கின்றனர். இதில் நதியாவுடன், நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கிறார். ரமேஷ் தமிழ்மணி டைரக்டு செய்கிறார். சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நதியாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.


Next Story