மீண்டும் நாயகனாக யோகிபாபு


மீண்டும் நாயகனாக யோகிபாபு
x

நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது 'யானை முகத்தான்' என்ற பெயரில் தயாராகும் படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ள ரெஜிஷ் மிதிலா டைரக்டு செய்து தயாரிக்கிறார். இதில் கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

அதே கணேஷ் பெயரில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக்கும் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறுவார். ரமேஷ் திலக்கிடம் யோகிபாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்தி ஒரு நிபந்தனையும் விதிக்கிறார். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்கிறது கதை'' என்றார் இயக்குனர். ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியான், ஹரிஷ் பேரடி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு: கார்த்திக் எஸ்.நாயர், இசை: பரத் சங்கர்.

1 More update

Next Story