சினிமா துளிகள்

தீபாவளி ரேஸில் இணையும் விக்ரம் + "||" + Vikram joins Deepavali Race

தீபாவளி ரேஸில் இணையும் விக்ரம்

தீபாவளி ரேஸில் இணையும் விக்ரம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம், அடுத்ததாக நடித்துள்ள படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ‘மகான்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் ‘அண்ணாத்த’, சிம்புவின் ‘மாநாடு’, அருண் விஜய்யின் ‘வா டீல்’ ஆகிய படங்கள் தீபாவளியன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 'கோப்ரா' படப்பிடிப்பை முடித்தார் விக்ரம்..!
நடிகர் விக்ரம் 'கோப்ரா' திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டார்.
2. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3. மீண்டும் இணையும் ‘அருவி’ கூட்டணி
'அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4. இரண்டு பாகங்களாக கமலின் ‘விக்ரம்'?
கார்த்தியின் கைதி மற்றும், விஜய்யின் மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
5. சூப்பர் ஹீரோ கதையில் விக்ரம்
விக்ரம் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாகவும், பா.ரஞ்சித் இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.