இந்தியாவில் முதல்முறையாக 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' முறையில் வெளியாகும் பீஸ்ட் டிரைலர்..!


இந்தியாவில் முதல்முறையாக பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் முறையில் வெளியாகும் பீஸ்ட் டிரைலர்..!
x
தினத்தந்தி 2 April 2022 4:19 PM IST (Updated: 2 April 2022 4:19 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் முதல்முறையாக 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' முறையில் பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், இந்தியாவில் முதல்முறையாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் 'பிரீமியம் லார்ஜ் ஃபார்மட்' என்ற நவீன டெக்னாலஜி முறையில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் என்பது முழுமையான திரை மற்றும் நவீன டெக்னாலஜியில் அமைந்த ஒலி அமைப்புடன் 'ஐமேக்ஸ்' போன்ற அனுபவத்தை தருவதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் நாம் செல்போனில் வீடியோ பார்க்கும் போது, நம்முடைய செல்போன் திரையின் அளவிற்கு ஏற்ப வீடியோவை மாற்றி கொள்வோம். ஆனால் இந்த டெக்னாலஜி மூலம் வீடியோ தானாகவே திரையின் அளவிற்கு மாறிவிடும் என்று கூறப்படுகிறது. 

Next Story