சாதனையாளர்

கனடா நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற தமிழக பெண் + "||" + shine high in canada defense sky..!

கனடா நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற தமிழக பெண்

கனடா நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்ற தமிழக பெண்
நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் பாதுகாப்பாக உணர்வதையே எனது முதல் கடமையாக கருதுகிறேன்.
னடா நாட்டின் பாராளுமன்றத்தில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நாட்டு அரசாங்கத்தில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், தற்போது கனடாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அவரைப் பற்றிய தொகுப்பு இங்கே…

அனிதாவின் தாயார், மருத்துவர் சரோஜ் ராம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை மருத்துவர் சுந்தரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் 1965-ம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்தனர். 

54 வயதாகும் அனிதா, கனடாவிலுள்ள நோவா ஸ்காட்டியாவில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். தற்போது தனது கணவர் ஜான் மற்றும் தனது 4 குழந்தைகளுடன், ஆண்டாரியோவில் உள்ள ஓக்வில்லி நகரத்தில் வசித்து வருகிறார்.

கல்வியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அனிதா, டால் ஹவுஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டம், டொரன்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் என இதுவரை நான்கு பட்டங்கள் பெற்றிருக்கிறார்.

பன்முகத் திறமை கொண்ட அனிதா, 1994-ம் ஆண்டு ஆண்டாரியோ பார் கவுன்சில் அதிகாரியாகவும், 1997-ம் ஆண்டு வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகவும், 1999-ம் ஆண்டு குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும் பணி யாற்றினார். 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிகத்தின் நெறிமுறைகள் குறித்த திட்டங்களுக்கு கல்வி இயக்குனராக பணியாற்றினார்.

அரசியல் பிரவேசம்:
பெரு நிறுவன நிர்வாகம், முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் நிதிச் சந்தை விதிமுறைகள் ஆகியவற்றில் முழுமையான ஆராய்ச்சியை முடித்து, நிபுணத்துவம் பெற்ற அனிதா 2015-ம் ஆண்டு ஒன்டாரியோ அரசாங்கத்தின் நிதி ஆலோசனை மற்றும் நிதிக் கொள்கையை பரிசீலிக்கும் நிபுணர் குழுவில் நியமிக்கப்பட்டார். பின்பு, 2019-ம் ஆண்டு ஓக்வில்லி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராகப் பணியாற்றினார்.

கொரோனா பரவல் ஏற்பட்ட ஆரம்ப காலத்தில் கனடா அரசாங்கத்தின் கொள்முதல் அமைச்சராக அனிதா பணியாற்றியதால், உடனடியாக தடுப்பூசி
களைப் பெறுவதற்காக பல திட்டங்களை தீட்டி பல்வேறு தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்தார். கனடாவின் அனைத்து மக்களுக்கும் தேவையான பரிசோதனைகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு (2021) கனடா பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா அரசாங்கத்தின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரியும் இரண்டாவது பெண் அனிதா.

“நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் பாதுகாப்பாக உணர்வதையே எனது முதல் கடமையாக கருதுகிறேன். அவர்களின் மரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாதுகாப்பது அவசியமானதாகும்” எனக் கூறி செயல்பட்டு வருகிறார் 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.