வெள்ளை உடை தேவதை


வெள்ளை உடை தேவதை
x
தினத்தந்தி 9 May 2022 5:30 AM GMT (Updated: 7 May 2022 11:17 AM GMT)

மத்திய அரசு வழங்கும் செவிலியர்களின் உயர்ந்த விருதான ‘தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது 2015-ம் ஆண்டு கிடைத்தது. 2020-ம் ஆண்டில் சமூகப்பணி மற்றும் களப்பணிக்காக ‘எக்ஸ்ட்ராடினரி டேலண்ட் அவார்ட் மற்றும் இன்டியா ஸ்டார் பெர்சனாலிட்டி’ விருது பெற்றேன்.

கிப்புத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன், சுகாதாரத் துறையில்  39 வருடங்களாக சேவைப் பணியைத் திறம்பட செய்து வருகிறார், சமுதாய நல செவிலியரான கஸ்தூரி மணிவண்ணன். தனது சமூகப் பணிக்காக பல விருதுகள் பெற்றுள்ளார். அவருடன் நடந்த உரையாடல் இங்கே….

“எனது சொந்த ஊர் திருவள்ளூர். நான் செவிலியருக்கான படிப்பை முடித்து, கிராம சுகாதார செவிலியராக பணியைத் தொடங்கினேன். சோசியாலஜி மற்றும் பாப்புலேஷன் ஸ்டடீசில் முதுகலைப் பட்டமும் பெற்றேன்.

27 வருட சேவைக்கு பிறகு, துறை ஆரோக்கிய செவிலியராக பதவி உயர்வு பெற்றேன். 8 வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு பதவி உயர்வு கிடைத்தது. அதில் இருந்து தற்போது வரை சமுதாய நல செவிலியராக பணியாற்றி வருகிறேன். பதவி உயர்வின் இடமாற்றம் காரணமாக வெவ்வேறு இடங்களிலும் பணியாற்றி இருக்கிறேன்.

உங்கள் பணி அனுபவங்களை பற்றி சொல்லுங்கள்?
கிராம சுகாதார செவிலியராக இருந்த போது பல பெண்களுக்கு பிரசவங்கள் பார்த்திருக்கிறேன். ஒரு மாதத்தில் 120 பிரசவங்கள் பார்த்த அனுபவமும் உண்டு. எய்ட்ஸ் மற்றும் தொழு நோயாளிகள் உள்பட, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் எல்லா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்திருக்கிறேன். பல விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் சுகாதார பயிற்சி வகுப்புகளை நடத்தி இருக்கிறேன்.

நீங்கள் வாங்கியுள்ள விருதுகளைப் பற்றி கூறுங்கள்?
மத்திய அரசு வழங்கும் செவிலியர்களின் உயர்ந்த விருதான  ‘தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது 2015-ம் ஆண்டு கிடைத்தது. 2020-ம் ஆண்டில் சமூகப்பணி மற்றும் களப்பணிக்காக ‘எக்ஸ்ட்ராடினரி டேலண்ட் அவார்ட் மற்றும் இன்டியா ஸ்டார் பெர்சனாலிட்டி’ விருது பெற்றேன். 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் ‘அவுட்ஸ்டான்டிங் உமென் புரொபெஷனல் விருது மற்றும் லட்சிய மகுடம் விருது கிடைத்தது. மேலும் பல நற்சான்றிதழ்களும், பாராட்டு சான்றிதழ்களும் பெற்றிருக்கிறேன்.

குடும்பத்தாரின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது?
ஆரம்ப காலத்தில் நான் பணி இடமாற்றம் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும்போது, எனது மகள்களை என்னுடைய அம்மா பார்த்துக்கொண்டார். இப்போது என் கணவரும், மகள்களும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதன் காரணமாக முழு ஈடுபாட்டோடு பணியாற்ற முடிகிறது.

கொரோனா காலத்தில் உங்களது பணிகள் பற்றி….
அது மிகவும் நெருக்கடியான காலம். நான் மட்டும் அல்ல, சுகாதாரத்துறை சார்ந்த அனைவருமே சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் உழைத்தோம். வீடு தேடிச் சென்று மருத்துவ சேவை செய்தோம். தற்போதும் செய்து வருகிறோம்.

சேவை சார்ந்து மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
சகிப்புத்தன்மையும், பொறுமையும், கடினஉழைப்பும் மிக அவசியம். இதைத்தான் எனக்கு கீழ் பணிபுரியும் எல்லா சகோதரிகளுக்கும் நான் கற்பிக்கிறேன். இது எல்லோருமே தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. 

Next Story