வைகறை துயில் எழு


வைகறை துயில் எழு
x
தினத்தந்தி 27 Dec 2021 11:00 AM IST (Updated: 25 Dec 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும், இயற்கையோடு இணைந்து வாழும் தன்மை கொண்டவை. எனவே சூரியன் மறைந்த இரவு நேரத்தில் உறக்கம் கொண்டு, சூரியன் உதிக்கும்போதே கண்விழிக்கும் முறையே நன்மை தரும்.

ரவில் சீக்கிரமாக தூங்கி, அதிகாலையில் எழும் பழக்கம் பாரம்பரியமாக நம்மிடையே இருக்கிறது. பலர் பல்வேறு காரணங்களால் இரவில் வெகு நேரம் கண்விழித்து, காலையில் தாமதமாக எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலையில் எழும் பழக்கம் உடல் நலத்தையும், மன நலத்தையும் மேம்படுத்தும். 

பெண்களுக்கு தங்கள் கடமைகளை நிதானமாக செய்வதற்கும், தங்களுக்கான வேலைகளை மேற்கொள்வதற்கும் போதுமான நேரம் கிடைக்கும். பதற்றம் இல்லாமல் புத்துணர்வோடு அன்றைய தினத்தை தொடங்க முடியும்.

அதிகாலை நேரத்தில் சுற்றுச்சூழலில் காற்று மற்றும் ஒலி தொடர்புடைய மாசுபாடுகள் குறைவாக இருக்கும். நிசப்தமான நேரத்தில், மன அமைதியோடு அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். காற்றில் தூய்மையான ஆக்சிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதை சுவாசிப்பதன் காரணமாக மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.

உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களும், இயற்கையோடு இணைந்து வாழும் தன்மை கொண்டவை. எனவே சூரியன் மறைந்த இரவு நேரத்தில் உறக்கம் கொண்டு, சூரியன் உதிக்கும்போதே கண்விழிக்கும் முறையே நன்மை தரும். 

இயற்கையை சார்ந்து நமது வாழ்க்கை முறை அமையும்போது வாழ்வு மேம்படும். அதற்கு மாறாக செயல்படும்போதுதான் பல பிரச்சினைகளை சந்திக்கிறோம். எனவே வைகறையில் துயில் எழுவோம்; வளம் பெறுவோம். 

Next Story