சர்வதேச மகிழ்ச்சி தினம்


சர்வதேச மகிழ்ச்சி தினம்
x
தினத்தந்தி 21 March 2022 5:30 AM GMT (Updated: 19 March 2022 10:17 AM GMT)

நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் புத்திசாலித்தனமான முயற்சியை மேற்கொள்வது வெற்றிக்கான பாதையை வகுக்கும்.

ணம், சுவையான உணவு, விலையுயர்ந்த பொருட்கள், பயணம், வெற்றி, உறவு, அன்பு என மகிழ்ச்சியின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். ஆனால், ஐ.நா.சபை, ‘போர் மற்றும் வறுமையை உலக அளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி’ எனக் கருதுகிறது. 

நம் செயல் மற்றும் சிந்தனையின் இறுதி இலக்கு மகிழ்ச்சியே. மேலும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை 2012-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 20-ந் தேதியை ‘சர்வதேச மகிழ்ச்சி தினமாக’ அறிவித்தது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான கருப்பொருள் ‘அமைதியாக இருங்கள்; புத்திசாலித்தனமாக இருங்கள்; கனிவாக நடந்து கொள்ளுங்கள்’ என்பதாகும். எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பது, மகிழ்ச்சி மற்றும் திருப்திக்கான திறவுகோலாக அமையும். 

நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகளில் புத்திசாலித்தனமான முயற்சியை மேற்கொள்வது வெற்றிக்கான பாதையை வகுக்கும். நமக்கு பிடித்தவர்கள், நம்மை பிடித்தவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி, அனைவரிடமும் கனிவுடன் நடந்துகொள்வது நம்முடைய தவறை திருத்திக்கொள்ள உதவும்; நம் முயற்சிகளுக்கான தடையை கடந்து செல்ல தூண்டுகோலாக இருக்கும்.

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்தாலும், நம் சிறு புன்னகையை அதன் திறவுகோலாக்கி, நேர்மறை என்னும் ஊற்றை பெருக்கி மகிழ்ச்சியின் சுவையை அதிகரிக்கலாம். 

Next Story