சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கை பயன்படுத்தி தயார் செய்யப்படும் முறுக்கு வகை மற்றும் கோதுமை மாவு தட்டை செய்வது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு முறுக்கு
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு - 2
அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ½ டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உருளைக் கிழங்கை வேகவைத்து, அதோடு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து
நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.
இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.
இந்த மாவை சூடான எண்ணெய்யில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.
கோதுமை மாவு தட்டை
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
பாசி பருப்பு - 2 மேசைக்கரண்டி
சோளமாவு - 4 மேசைக்கரண்டி
எள் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெண்ணெய் - 50 கிராம்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சித் துண்டை மிக்சியில் போட்டு தனியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோளமாவு, அரைத்து வைத்திருந்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வெண்ணெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்து மாவைக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது, எள், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.
இப்போது அதில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைய வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து சப்பாத்தி திரட்டுவதுபோல் மாவைத் திரட்டி உங்களுக்கு விருப்பமான வடிவில் வெட்டி துண்டு போட்டுக்கொள்ளவும்.
அவற்றை சூடான எண்ணெய்யில் பொன்னிறமாகும் வரை பொரித்தால், மொறுமொறுப்பான கோதுமை மாவு தட்டை தயார்.
Related Tags :
Next Story