கேக் வகைகள்


கேக் வகைகள்
x
தினத்தந்தி 13 Dec 2021 11:00 AM IST (Updated: 11 Dec 2021 3:07 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ருசிக்கும் கேக் வகைகளின் செய்முறையை பார்க்கலாம்.

லெமன் கேக்:

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 3 கப் 
பால் - 1 கப்
நெய் - 1 கப்
ஆரஞ்சு அல்லது லெமன் கலர் - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழம் - 5
முந்திரி பருப்பு - 10
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி



செய்முறை:
மைதா மாவில் சிறிது நெய் கலந்து, பச்சை வாசனை போகும் வரை பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். அதில் பால் ஊற்றி கட்டிகள் 
இல்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளவும்.
எலுமிச்சம் பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய எலுமிச்சம் பழத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதை ஆற வைத்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அடிப்பக்கம் கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடானதும் சர்க்கரையைக் கொட்டி கம்பிப்பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். பின்பு அதில் மைதா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். கலவை நன்றாக நுரைத்து வரும்போது, எலுமிச்சை விழுதை அதில் போட்டு நன்றாகக் கிளறவும். பிறகு நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றவும்.
இப்போது அந்தக் கலவையில் லெமன் அல்லது ஆரஞ்சு கலர் சில துளிகள், வெனிலா எசன்ஸ் சில துளிகள், ஏலக்காய்த் தூள், பொடிப் பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு, திராட்சை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவை பர்பி பதத்துக்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமமாக்கவும். ஆறியவுடன் துண்டுகளாக வெட்டி 
பரிமாறவும்.
அதிக செலவில்லாமல் வித்தியாசமான சுவையில் ‘லெமன் கேக்’ ரெடி.

ஆரஞ்சு பர்பி

தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழங்கள் - 4
சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
முந்திரி, பாதாம் 
(பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை:
ஆரஞ்சு பழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதனை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும்.
பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும். இப்போது கலவை சற்றே நீர்த்து போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.
கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும். ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
1 More update

Next Story