நுங்கு ரெசிபி


நுங்கு ரெசிபி
x
தினத்தந்தி 28 March 2022 11:00 AM IST (Updated: 26 March 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும் நுங்குவை கொண்டு செய்யப்படும் ரெசிபிக்கள் இங்கே..

‘இயற்கை ஜெல்லி’ என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றும். கல்லீரல் இயக்கத்தை சீராக்கும். கொழுப்பைக் குறைக்கும். இதைக் கொண்டு விதவிதமான ரெசிபிகள் தயார் செய்து அசத்தலாம். அவற்றில் சில இங்கே…

நுங்கு பாயசம்

தேவையானப் பொருட்கள்:
நுங்கு - 5
பால் - ½ லிட்டர்
சர்க்கரை - 75 கிராம்
ஏலக்காய் - 3
குங்குமப்பூ - 2 சிட்டிகை



செய்முறை:
நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஊற வைத்துத் தோல் உரித்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். காய்ச்சிய பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையைக் கலந்து சற்று கெட்டியாகும் வரை காய்ச்சி ஆற வைக்கவும். பின்பு அதில் நுங்குத் துண்டுகளைச் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரச்செய்து, குங்குமப்பூவைத் தூவி சில்லெனப் பரிமாறவும்.

நுங்கு ஐஸ்கிரீம்

தேவையானப் பொருட்கள்
நுங்கு - 10
எலுமிச்சம்பழச் சாறு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 5 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு



செய்முறை:
நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும். கலவையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மிக்சியில் அரைத்து, மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கவும். இதேபோல தொடர்ந்து நான்கு முறை செய்யவும். இப்பொழுது நாவில் கரையக் கூடிய சில்லென்ற ‘நுங்கு ஐஸ்கிரீம்’ தயார். 

Next Story