நோய்க்கு மருந்தாகும் வண்ணங்கள்


நோய்க்கு மருந்தாகும் வண்ணங்கள்
x
தினத்தந்தி 14 March 2022 11:00 AM IST (Updated: 12 March 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், கேன்சர், ஜீரண குறைபாடு போன்ற பல வியாதிகளுக்கு இந்த ‘வண்ண சிகிச்சை’ அளிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

‘குரோமோதெரபி’ எனும் ‘வண்ண சிகிச்சை’ இயற்கை மருத்துவத்தில் உள்ள சிகிச்சை முறை யாகும். சூரியனின் ஒளியில் இருந்து வண்ணங்கள் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் வானவில் நிறங்களான ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மன அழுத்தம், தூக்கமின்மை, தோல் நோய்கள், கேன்சர், ஜீரண குறைபாடு போன்ற பல வியாதிகளுக்கு இந்த ‘வண்ண சிகிச்சை’ அளிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

‘கிரிஸ்டல்’ எனப்படும் கலர் கண்ணாடி பாட்டில்களில், தண்ணீர் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி வெயிலில் வைத்து ‘சார்ஜ்’ செய்யப்பட்டு அந்த நீர் அல்லது எண்ணெய் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். இது குறித்து கூறுகிறார் சென்னை சித்த மருத்துவமனையின் இயற்கை மருத்துவர் இந்திராதேவி.

‘வண்ண சிகிச்சை முறை’ மூலம் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயின் தன்மையைப் பொறுத்து கவுன்சலிங் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நோய்க்கு தகுந்த வண்ணங்களை காண்பதன் மூலம் நோய் குணமாகிறது.

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களின் படுக்கை அறையை நீல நிறத்திற்கு மாற்றும்படி அறிவுறுத்துகிறோம். நீல நிறத்திற்கு மனதை சாந்தப்படுத்தும் தன்மை உண்டு. 

சிவப்பு வண்ண சிகிச்சை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையை குறைக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும்  உதவுகிறது.

மஞ்சள் வண்ண சிகிச்சை உடல் மற்றும் மனம் தெளிவடைய உதவும்.  நல்ல சிந்தனைக்கும், உடல் புத்துணர்ச்சிக்கும், பெருங்குடல் சீராக வேலை செய்யவும் உதவும்.

ஆரஞ்சு வண்ண சிகிச்சை மூலம் மந்தமான தன்மையில் இருந்து மீண்டு துடிப்பான நிலைக்கு வரலாம். 

பச்சை வண்ண சிகிச்சை,  உடலில் உள்ள வலிகளை நீக்கப் பயன்படும். குறிப்பாக இந்த நிறம் மூட்டு எலும்புகள் சம்பந்தப்பட்ட வலிகள் நீங்க பயன்படும். தலை வலிக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கும்.

ஊதா வண்ண சிகிச்சை மனச் சோர்வு நீங்கவும், மன அழுத்தம் குறையவும், மனம் சார்ந்த அனைத்து நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

கருநீல வண்ண சிகிச்சை மனதை அமைதிப்படுத்தவும், உடலை சீராக இயங்க வைக்கவும் பயன்படுகிறது. 

Next Story