சரும அழகை மேம்படுத்தும் குப்பைமேனி


சரும அழகை மேம்படுத்தும் குப்பைமேனி
x
தினத்தந்தி 18 April 2022 11:42 AM IST (Updated: 18 April 2022 11:42 AM IST)
t-max-icont-min-icon

குப்பை மேனியில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்டுகள், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் மாசுபாடு,  பதப்படுத்தப்பட்ட உணவு களைச் சாப்பிடுவது, ரசாயனங்கள் கலந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்பாடு, நோய்க் கிருமிகளின் தாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால், நமது சருமத்தில் பல பாதிப்புகள் உண்டாகின்றன. இவ்வாறு உடலில் ஏற்படக்கூடிய எத்தகைய சரும நோயாக இருந்தாலும், அதனை குணப்படுத்தும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு.

குப்பை மேனியில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்டுகள், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்பெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

குப்பைமேனி இலையுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதை உடல் முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம், சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் முற்றிலும் குணமாகும்.

பேசிலஸ் சப்டிலிஸ், எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா போன்ற பாக்டீரியா வகைகளை எதிர்த்து செயல்படும் ஆற்றல் குப்பைமேனிக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 
சருமத்தில் ஏற்படும் வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகளையும் நீக்கும் சக்தி குப்பைமேனிக்கு உள்ளது.

குப்பை மேனி இலையை நன்றாக அரைத்து, அதன் சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் எண்ணெய்யை அடுப்பில் வைத்து காய்ச்சி, அதனுடன் இந்தச் சாற்றினைக் கலந்து இளம் சூடான நிலையில்  இறக்கிவிடவும். இதனை சருமத்தில் பாதிப்புகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையுடன், கற்றாழையின் உள் இருக்கும் ஜெல் மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றைக் கலந்து, நன்றாக அரைத்து, முகத்தில் பூசி வந்தால்  கரும்புள்ளிகள், பருக்கள், கண்களின் கீழ் இருக்கும் கருவளையம் போன்றவை நீங்கி முகம் பளபளப்பாக மாறும்.

ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு. குப்பைமேனி இலையுடன் இரண்டு மிளகை சேர்த்து அரைத்து, தினமும் காலை எழுந்ததும் உணவுக்கு முன்னால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். உடல் வலிமை பெற்று  சோர்வு நீங்கிவிடும்.

எனவே வாரத்தில் இரண்டு முறையாவது குப்பைமேனியை பயன்படுத்தி  வந்தால் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். 

Next Story