உடலை வலுவாக்கும் பயிற்சிகள்


உடலை வலுவாக்கும் பயிற்சிகள்
x
தினத்தந்தி 25 April 2022 5:30 AM GMT (Updated: 23 April 2022 12:28 PM GMT)

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், பிட்டத் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும். அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். சோம்பல் நீங்கும்.

டலுக்கு சோர்வை ஏற்படுத்தாமல், வலிமையையும், நெகிழ்வுத் தன்மையையும் தருபவை யோகா பயிற்சிகள். வேலைகள் செய்வது, உட்காருவது, எழுவது என உடலின் பல இயக்கங்களுக்கு அடிப்படையாக இருக்கும் இடுப்பு எலும்புகள், கால் மூட்டுகள் மற்றும் பாதங்களுக்கு வலிமை சேர்ப்பதற்கு இந்தப் பயிற்சிகள் உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகா பயிற்சிகளை செய்யும்போது எலும்புகள் 
மற்றும் தசைகள் பலம் பெறும்.

ஏகபாத ராஜ கபோட்டாசனா:

புறாவைப் போன்ற தோற்றத்தில், ஒற்றை காலைக் கொண்டு செய்யும் வகையில் இந்த ஆசனம் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தப் பயிற்சியை செய்வதன் மூலம் தலைக்கும், காலுக்கும் இடைப்பட்ட உறுப்புக்கள் பலம் பெறுகின்றன.

முதலில் மண்டியிட்டு அமருங்கள். பின்னர் குழந்தை தவழ்வது போல கைகளை முன்னால் ஊன்றுங்கள். இந்த நிலையில் மெதுவாய் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். இப்போது இடது காலை மடக்கி, வலது காலை பின்புறமாக நீட்டவும். பின்பு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றவும்.

பின்னர் படத்தில் காட்டியது போல் மெதுவாக வலது காலை மடக்கி, மேலே நோக்கி கொண்டு வரவும். கைகளால் வலது பாதத்தை பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது ஆழ்ந்து மூச்சை உள்
ளிழுத்து வெளியிடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். அதன் பிறகு இடது காலிலும் இதே போன்று செய்யவும்.

இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், பிட்டத் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும். அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். சோம்பல் நீங்கும்.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்:
இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி, வலது காலை இடதுகாலிற்கு வெளிப்புறமாக தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு உடலின் மேல்பாகத்தை வலதுபக்கமாகத் திருப்ப வேண்டும். முதுகுத் தண்டு வடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வலதுகால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு, வலது கையை பின்பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்பாக மூச்சை உள்ளே இழுத்தவாறு, 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து திரும்பவும். மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.

இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடையும். ரத்த ஓட்டம் சீராகும். மூளை நரம்புகளின் இறுக்கம் குறையும். கழுத்து, இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடையும். செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டும். உடல்சோர்வு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் குறையும். 

Next Story