உடல் எடைக் குறைப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும் ‘ரோஸ் டீ’


உடல் எடைக் குறைப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும் ‘ரோஸ் டீ’
x
தினத்தந்தி 2 May 2022 5:30 AM GMT (Updated: 2022-04-30T18:28:47+05:30)

உடல் எடைக் குறைப்புக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும் ‘ரோஸ் டீ’

ழகிய நிறத்தாலும், மென்மையான வாசத்தாலும் மயக்கும் ரோஜா மலர், ஆயுர்வேதம் மற்றும் சில மருத்துவ முறைகளில் மருந்தாகவும் பயன்படுகிறது. ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘ரோஸ் டீ’ எடையைக் குறைப்பதற்கும், உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை தினமும் பருகுவதால், சருமப் பொலிவு மேம்படும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். செரிமானம் சீராகும். இதன் நறுமணம் மன அழுத்தத்தை நீக்கி, மனநிலையை மேம்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

ரோஸ் டீயில், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், எடை இழப்பைத் தூண்டி, சீரான எடையைக் காக்க உதவும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் ரோஸ் டீ குடிப்பதால் செரிமானம் துரிதமாக நடைபெறும். இதன் மூலம் உடலில் தேங்கும் தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேறும்.

ரோஸ் டீயில் உள்ள மூலப்பொருட்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதனால், தேவையற்ற துரித உணவுகளைத் தேடி மனம் அலையாது. 

ரோஸ் டீயில் உள்ள வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கும். இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் ஆற்றல் கிடைக்கும். பலப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு அமைப்பு உடல் எடையைக் குறைக்க உதவும்.

ரோஸ் டீ பருகுவதால், பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் வலி, தசைப்பிடிப்பு நீங்கும். ரோஸ் டீ உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு  இனிமையான விளைவை தருவதாக 
ஆய்வுகள் கூறுகின்றன. இது சிறந்த வலி நிவாரணியாகவும் விளங்குகிறது.

ரோஸ் டீ தயாரிப்பு:

ரோஸ் டீ தயாரிப்புக்கு புதிய ரோஜா இதழ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் மலர் கிடைக்கும் பட்சத்தி்ல் அதைப் பயன்படுத்தலாம். இயலாதவர்கள், ரோஜா இதழ்களை வெயிலில் உலர வைத்து, பத்திரப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
ரோஜா இதழ்கள் - 20
தண்ணீர் - 1 ½ கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை சேர்த்து 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். நீரின் நிறம் சிவப்பாக மாறும் வரை வைத்திருந்து பிறகு வடிகட்டிக் குடிக்
கலாம். இதை அப்படியே பருகப் பிடிக்காதவர்கள், டீத்தூள் கலந்து கொதிக்க வைத்து, வழக்கமான டீ போல் தயாரித்துப் பருகலாம். எடை குறைக்க விரும்புபவர்கள், இனிப்பு சேர்க்காமல் அப்படியே பருகுவது சிறந்தது. 

Next Story