‘மேக் அப்’ நுணுக்கங்கள்


‘மேக் அப்’ நுணுக்கங்கள்
x
தினத்தந்தி 16 May 2022 5:30 AM GMT (Updated: 14 May 2022 12:00 PM GMT)

மேக்-அப் என்பது ஒரு படிப்படியான செய்முறை. அதன் விளக்கங்களை கீழே காணலாம்:

ழகுக்கு அழகு சேர்ப்பதுதான் ‘மேக்-அப்’. இதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. ஆனாலும், ‘மேக்-அப்’ என்றதும் பவுண்டேஷன் போட்டு, அதற்கு மேல் ரோஸ் பவுடர் போடுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருக்கிறது. மேக்-அப் என்பது ஒரு படிப்படியான செய்முறை. அதன் விளக்கங்களை கீழே காணலாம்:

1. முதலில் மேக்-அப் செட்டிங் ஸ்பிரே அடித்து, சருமத்தை மேக்-அப்பிற்குத் தயார் செய்ய வேண்டும்.

2. அடுத்ததாக மேக்-அப்பின் அடிப்படையாக செயல்படும், பிரைமரை (primer) சருமத்தில் பூச வேண்டும். எண்ணெய்பசை கொண்ட சருமத்திற்கு, ஜெல் வடிவிலான பிரைமரையும், உலர்ந்த சருமத்திற்கு, கிரீம் வடிவிலுள்ள பிரைமரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. அதைத் தொடர்ந்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், திட்டுகள் உள்ள இடத்தில் கலர் கரெக்டரை பூசி, அதை சருமத்துடன் ஒன்றுமாறு செய்ய வேண்டும்.

4. பின்பு, கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் உதட்டை சுற்றியுள்ள கருமை நிறத்தை மறைக்க, கன்சீலரைப் (concealer) பயன்படுத்த வேண்டும். இதையும் பிளண்டர் வைத்து பிளண்ட் செய்வது அவசியம்.

5. உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷனைத் தேர்வு செய்ய வேண்டும். அதை முகத்தில் புள்ளி புள்ளியாக ஆங்காங்கே வைத்து பூச வேண்டும். முகத்தோடு சேர்த்துக் கழுத்திலும் பூசுவது அவசியம். 
அப்பொழுதுதான் முகம் தனியாக வித்தியாசமாகத் தெரியாமல் இருக்கும். பவுண்டேஷனைக் கீழ் நோக்கி தடவும் முறையே சரியானது.

6. இதற்கு அடுத்து, காம்பேக்ட் பவுடரை முகத்தில் பூச வேண்டும். முகத்திலுள்ள சிறுசிறு குழிகள், கோடுகளை மறைக்கவும், சரி செய்து சமன்படுத்தவும் இது உதவும்.

7. இப்பொழுது கண்களுக்கான மேக்-அப்பில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடைக்கு ஏற்ற நிறத்தில் ‘ஐ ஷேடோ’வைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் ஒரு தங்க நிற நிறமியைக் கலந்து 
பூசினால், கண்கள் பளிச்சென இருக்கும்.

8. காஜலை கண்களுக்குக் கீழேயும், ஐ-லைனரை கண்களுக்கு மேலேயும், கவனமானத் தடவ வேண்டும். அது கரைந்து போகாத மற்றும் வாட்டர் ப்ரூப் ஐ-லைனராக இருந்தால் சிறந்தது.

9. செயற்கையாக விற்கும் கண் இமை முடிகளை, அதன் பசையுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டால், கண்களை மேலும் அழகாகக் காட்ட முடியும். இல்லையெனில், மஸ்காரா தடவி இமை முடிகளை அடர்த்தியாக காட்டலாம்.

10. புருவத்திற்கென தனியாக ஸ்பூலி பிரஷ் (spoolie brush) கிடைக்கிறது. முதலில் அதன் ஒரு பக்கம் இருக்கும் மையை பயன்படுத்தி, புருவத்தின் பார்டரை வரைந்துவிட்டு, மறுபக்கம் உள்ள பிரஷின் மூலம், புருவ முடிகளை ஒழுங்குபடுத்தி பிளண்ட் செய்துகொள்ள வேண்டும்.

11. முகத்தில் பிளஷ்ஷிற்கு (blush) பதிலாக ஹைலைட்டரை தேவைப்படும் இடங்களில் பூசி மெருகேற்ற வேண்டும்.

12. கடைசியாக மேக்-அப் பிக்ஸர் ஸ்ப்ரே (fixer spray) அடிக்க வேண்டும். இதன் மூலம் பல மணி நேரங்கள் வரை மேக்-அப் கலையாமல் பாதுகாக்கலாம். 

Next Story