உடல் எடையை குறைக்கும் எப்சம் உப்புக் குளியல்


உடல் எடையை குறைக்கும் எப்சம் உப்புக் குளியல்
x
தினத்தந்தி 16 May 2022 11:00 AM IST (Updated: 14 May 2022 5:58 PM IST)
t-max-icont-min-icon

உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து பானங்கள் என பலவித வழிமுறைகள் உள்ளன. அந்த வரிசையில் எப்சம் உப்புக் குளியலும் பலன் தருகிறது. அதனைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.

டல் எடையை  குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து பானங்கள் என பலவித வழிமுறைகள் உள்ளன.  அந்த வரிசையில் எப்சம் உப்புக் குளியலும் பலன் தருகிறது. அதனைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.

உடல் எடை குறைப்பில் எப்சம் உப்பு எவ்வாறு செயல்படுகிறது?
எப்சம் உப்பை ‘மெக்னீசியம் உப்பு’ என்றும் அழைக்கலாம். இது  மெக்னீசியம், சல்பர் மற்றும் ஆக்சிஜன் கலந்த கலவையாகும். ரத்தத்தில்  மெக்னீசியம் மற்றும் சல்பேட் அளவு சீரற்ற நிலைமையில் இருந்தால், பல உடல் உபாதைகள் ஏற்படும்.

எப்சம் உப்பு கலந்த நீரில் குளிக்கும்போதோ அல்லது எப்சம் கலந்த நீரில் படுத்தபடி  சிறிது நேரம் ஓய்வெடுக்கும்போதோ, அதில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் சல்பேட் உடலில் எளிதாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் மெக்னீசியம் மற்றும் சல்பேட்டின் அளவினை சமமாக்கி உடல் செயல்பாடுகளை சீராக்குகிறது.

முறையற்ற உணவு சாப்பிடுதல், சத்து குறைபாடு, துரித உணவு, நேரம் தாழ்த்தி உணவு எடுத்துக்கொள்ளுதல் போன்ற பல காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேருவது மட்டுமல்லாமல், நச்சுக்களும் சேருகிறது. எப்சம் உப்புக் குளியலால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறையத் தொடங்குகிறது.

எப்சம் உப்பை, குளியலில் பயன்படுத்துவது எப்படி?
முதல் நாளில், குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரில் 1 தேக்கரண்டி அளவு எப்சம் உப்பைச் சேர்த்தால் போதுமானது. பின்பு மெல்ல அதன் அளவைக் கூட்ட வேண்டும். அதிகபட்சமாக 400 முதல் 500 கிராம் வரை சேர்க்கலாம். உடல் தாங்கக் கூடிய அளவிலான, வெதுவெதுப்பான நீரையே எப்சம் உப்புக் குளியலுக்கு பயன்படுத்த வேண்டும். எப்சம் உப்புடன் மேலும் சில பொருட்களை சேர்த்தும் குளிக்கலாம். அவை,

எப்சம் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் 
எப்சம் உப்பு ஒரு பங்கு மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் இரண்டு பங்கு என்ற விகிதத்தில் கலந்து குளிக்கலாம். இது எடை குறைப்புக்கு மட்டுமின்றி மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை நீக்கி மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

எப்சம் உப்பு மற்றும் எசென்ஷியல் எண்ணெய் 
எப்சம் உப்புடன், 10 முதல் 20 துளிகள் வரை ஏதாவது ஒரு எசென்ஷியல் எண்ணெய் கலந்து குளித்து வந்தால், மன அழுத்தம் வெகுவாக குறைந்து புத்துணர்ச்சியாக இருக்கலாம்.

எப்சம் உப்பை சரியான அளவில் பயன்படுத்தும்போது, சிறந்த பலனை அடையலாம்.  குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை எப்சம் நீரில் குளிக்கலாம். குளித்ததும் போதுமான அளவு குளிர்ந்த நீரை அருந்த வேண்டும். இந்த எப்சம் உப்புக் குளியலை எத்தனை நாளுக்கு ஒரு முறை குளிக்க வேண்டும் என்பதை மருத்துவரை அணுகி, உடலை பரிசோதித்து அறிந்து கொள்ள வேண்டும். துரிதமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக இதனை தினமும் பின்பற்றுவதை தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வதே நல்லது. 

Next Story