பொழுதுபோக்கு

சொக்க வைக்கும் சோனியா + "||" + soniya..! soniya..!

சொக்க வைக்கும் சோனியா

சொக்க வைக்கும் சோனியா
அறிமுகமான குறுகிய காலத்தில் பிரபல நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.
மீப காலமாக, தமிழ் சினிமாவுக்குப் புதுமுக கதாநாயகிகளின் வரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கல்லூரி மாணவியும், புதுமுக நடிகையுமான சோனியா, இளம் கதாநாயகியாக களமிறங்கியிருக்கிறார். ஆடம்பரமில்லாத அழகுடன் இருக்கும் சோனியா, ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். அவருடன் நடந்த உரையாடல்…

விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிப்பது பற்றி கூறுங்கள்?
“சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த நான், தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். சிறு வயதில் இருந்தே விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

அதனைத் தொடர்ந்து அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள ‘டைரி’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலிலும் நடித்திருக்கிறேன்.

நான் நடித்திருக்கும் இரண்டாவது படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனனுடன் இணை கதாநாயகியாக நடித்திருக்கிறேன். எது உண்மை; எது பொய் என்று தெரியாத வகையிலான ‘பேண்டசி’ திரைப்படம் அது.

அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருக்கிறேன். குடும்ப சென்டிமென்ட் மற்றும் அதிரடி காட்சிகள் கலந்த படம் அது.

இப்போது என்ன படத்தில் நடித்து வருகிறீர்கள்?
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் தணிகை, கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். நான் கதாநாயகியாக நடித்து வரும் முதல் படம் இது. இந்தப் படத்துக்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை. 

நான் எத்தனை படங்களில் நடித்தாலும், முதன் முதலில் கதாநாயகியான இந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது.

அறிமுகமான குறுகிய காலத்தில் பிரபல நடிகர்களின் படங்களிலும், பெரிய நிறுவனங்களின் படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். 

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.