சாலை விபத்தில் பலியான தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1¼ கோடி இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு


சாலை விபத்தில் பலியான தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1¼ கோடி இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jun 2017 3:28 AM IST (Updated: 12 Jun 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் பலியான தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1¼ கோடி இழப்பீடு வழங்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

சாலை விபத்தில் பலியான தனியார் நிறுவன அதிகாரியின் குடும்பத்துக்கு ரூ.1¼ கோடி இழப்பீடு வழங்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் பலி

ராய்காட் கர்ஜத் அருகே உள்ள பட்டல்கங்கா தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தவர் சுதாம்(வயது46). இவர் கடந்த 2006–ம் ஆண்டு கல்யாண்– அகமதுநகர் ரோட்டில் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன், கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுதாம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இழப்பீடு கேட்டு மேலாளர் சுதாமின் குடும்பத்தினர் மோட்டார் விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த 2011–ம் ஆண்டு மேலாளரின் குடும்பத்துக்கு ரூ.71 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

ரூ.1¼ கோடி இழப்பீடு

தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து காப்பீடு நிறுவனத்தினர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். மேலும் மேலாளரின் கவனக்குறைவால் தான் விபத்து நடந்ததாக வாதிட்டனர். எனினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் காப்பீடு நிறுவனத்தின் வாதத்தை ஐகோர்ட்டு ஏற்க மறுத்தது.

மேலும் மேலாளர் சுதாமின் குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 30 லட்சத்தை இழப்பீடாக வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story