கோவில் திருவிழாவையொட்டி மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொதுமக்கள் மனு


கோவில் திருவிழாவையொட்டி மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 14 Jun 2017 4:15 AM IST (Updated: 14 Jun 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவையொட்டி மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பொதுமக்கள் மனு

திருச்சி,

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதையொட்டி இரவில் அப்பகுதி மக்கள் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்து அபிஷேகம் செய்து விட்டு, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் தாரை, தப்பட்டை முழங்க அந்த வழியாக செல்லக்கூடாது என்று கூறி அவர்களை தடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவை சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இனாம்குளத்தூர் போலீசார் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் கோவில் திருவிழாவின் போது மோதலில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பின் மாநில பொருளாளர் பாண்டியன் தலைமையில் இனாம்குளத்தூரை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க நேற்று திரண்டு வந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் இல்லாததால், அலுவலகத்தில் இருந்த அதிகாரியிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் இது தொடர்பாக மனு கொடுத்தனர்.


Next Story