ஆதார் அட்டை வைத்திருந்த நேபாள நாட்டு பெண் கைது
ஆதார் அட்டை வைத்திருந்த நேபாள நாட்டு பெண் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மும்பை
ஆதார் அட்டை வைத்திருந்த நேபாள நாட்டு பெண் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆதார் அட்டைமும்பை விமான நிலையத்தில் இருந்து நேபாள நாட்டிற்கு செல்வதற்காக சம்பவத்தன்று ஜெயலட்சுமி குருங்(வயது29) என்ற பெண் ஒருவர் வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவரது விமான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது, அந்த பெண் நேபாள பிரஜை என்பதற்கான அந்த நாட்டின் அடையாள அட்டையும், இந்திய அரசால் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஆதார் அட்டையும் வைத்திருந்தார்.
நேபாள நாட்டு பெண் கைதுஇதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பெண்ணின் பயணத்திற்கு தடை விதித்து, அவரை பிடித்து சகார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ஜெயலட்சுமி குருங்கை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் தானே மாவட்டம் கல்யாணில் கடந்த 2009–ம் ஆண்டு முதல் வசித்து வந்துள்ளார்.
நேபாள நாட்டில் உள்ள தனது சொந்த ஊரான போகராவுக்கு செல்வதற்காக வந்தபோது, ஆதார் அட்டையுடன் சிக்கிக்கொண்டார். அவர் எப்படி ஆதார் அட்டை பெற்றார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு முன் பெங்களூருவில் பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் ஆதார் அட்டையுடன் கைதானது குறிப்பிடத்தக்கது.