இளம்பெண் முன் தகாத முறையில் நடந்தவர் கைது


இளம்பெண் முன் தகாத முறையில் நடந்தவர் கைது
x
தினத்தந்தி 13 July 2017 10:09 PM GMT (Updated: 13 July 2017 10:09 PM GMT)

மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து நாசிக் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதற்காக சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் வந்தார்.

மும்பை,

மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து நாசிக் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வதற்காக சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் வந்தார். அப்போது 13–ம் எண் பிளாட்பாரத்தில் அந்த இளம்பெண் முன் வந்த ஆசாமி ஒருவர், திடீரென தனது பேண்டை கழற்றி தகாத முறையில் நடந்து கொண்டார்.

இதை பார்த்து இளம்பெண் அதிர்ச்சி அடைந்தாலும், அவரது இந்த செய்கையை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதுபற்றி சி.எஸ்.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் அசோக் பிரதான் என்பவர் தான் இளம்பெண் முன் தகாத முறையில் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story