கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கு ஜாமீன்
கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை,
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் 30–ந் தேதி அங்கு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களால் போலீசார் தாக்கப்பட்டனர். அந்த தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்பட சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணை முடிவில், ஜாமீன் மனுக்களின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த மனுக்களின் மீதான தீர்ப்பை நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது நேற்று வாசித்தார்.
அதில் பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மற்ற 7 பேரும் திருச்சி மாவட்ட கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி கூறியுள்ளார்.