சென்னை விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு’ கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம் 100 பேர் கைது


சென்னை விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு’ கால் டாக்சி டிரைவர்கள் போராட்டம் 100 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2017 5:00 AM IST (Updated: 14 Sept 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிரீபெய்டு’ கால்டாக்சி டிரைவர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் தனியார் கால் டாக்சிக்கு நிரந்தர ஸ்டாண்டுக்கு விமான நிலைய நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.

அதற்கு அங்கு பல ஆண்டுகளாக இயங்கும் ‘பிரீபெய்டு’ கால் டாக்சிகளின் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், உள்நாட்டு விமானநிலைய வருகை பகுதியில் அவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு விமான நிலைய போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ‘பிரீபெய்டு’ கால் டாக்சி டிரைவர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

* அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை லிங்கம்மாளிடம் (50) மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.

* வண்ணாரப்பேட்டை பகுதியில் அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக, முகமது யூசுப் (22), தினேஷ் (19), விஜயகுமார் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* திருநின்றவூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (22). இவரிடம், செல்போனை வாங்கி பேசிவிட்டு தருவதாக கூறி தப்பி ஓடிய அரக்கோணத்தை சேர்ந்த ஷா (22) கைது செய்யப்பட்டார்.

* தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த பன்னீர்செல்வம் (23) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

* வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் ரியாஸ் (20) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.

* அண்ணாநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற வினோத்குமார் (28), மகேஷ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

* மேற்கு தாம்பரம் பகுதியில் ஒரு கடையின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ மாவா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை ஊழியர் திலீப்குமாரை (19) கைது செய்தனர். உரிமையாளர் சீத்தாராமை தேடி வருகின்றனர்.

* சென்னையில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வெள்ளைச்சாமி, டேவிட், மதி, ஸ்ரீதர் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

* புதுவண்ணாரப்பேட்டையில், பிரபல ரவுடி முருகன் (எ) கேட் முருகன் (41) வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தினேஷ்குமார் (22), மதன் (எ) ஜெயக்குமார் (22), கார்த்திக் (22), ராமு (எ) ராமச்சந்திரன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story