நடிகர் சல்மான்கானின் மெய்காவலர் என கூறி பெண் நிர்வாகிக்கு கற்பழிப்பு மிரட்டல்


நடிகர் சல்மான்கானின் மெய்காவலர் என கூறி பெண் நிர்வாகிக்கு கற்பழிப்பு மிரட்டல்
x
தினத்தந்தி 22 Oct 2017 4:45 AM IST (Updated: 22 Oct 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சல்மான்கானின் மெய்காவலர் என கூறி, தொண்டு நிறுவன பெண் நிர்வாகிக்கு செல்போனில் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பை கார் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மதியம் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை நடிகர் சல்மான்கானின் மெய்காவலர் என அறிமுகப்படுத்தி கொண்டார்.

திடீரென அந்த ஆசாமி தொண்டு நிறுவன பெண் நிர்வாகியிடம் மிகவும் ஆபாசமாக பேசி உள்ளார். மேலும் கும்பலுடன் வந்து கற்பழித்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

பின்னர் அந்த ஆசாமி செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். மர்ம ஆசாமியின் இந்த மிரட்டலால் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி கடும் அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொண்டு நிறுவன பெண் நிர்வாகிக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story