நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் விழா வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு


நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் விழா வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 3 Nov 2017 3:30 AM IST (Updated: 3 Nov 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்களின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.

மும்பை,

நடிகர் ஷாருக்கான் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு வாழ்த்து சொல்ல திரண்ட ரசிகர்களின் செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.

ஷாருக்கான் பிறந்தநாள்

நடிகர் ஷாருக்கான் நேற்று தனது 52–வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் ஷாருக்கான் ஆண்டுதோறும் பிறந்தநாள் அன்று பாந்திராவில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம். எனவே பிறந்தநாள் அன்று ஷாருக்கானை பார்த்து வாழ்த்து சொல்ல பாந்திராவில் உள்ள அவரது பங்களா வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள்.

இந்த ஆண்டும் நேற்று முன்தினம் இரவு முதலே அவரது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் நடிகர் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி கோ‌ஷங்களை எழுப்பினர்.

செல்போன்கள் திருட்டு

இந்தநிலையில் ரசிகர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். இதில், நேற்று முன்தினம் இரவு முதல் நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் திரண்டு இருந்த 10–க்கு மேற்பட்ட ரசிகர்களின் செல்போன்கள் திருடப்பட்டதாக பாந்திரா போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரசிகர்களிடம் செல்போன் திருடும் திருடர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.


Next Story