ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது


ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2017 10:12 PM GMT (Updated: 18 Nov 2017 10:11 PM GMT)

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

புனே,

புனே சுத்தார்வாடி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு புதிதாக மின்மீட்டர் பொருத்த மின்வாரிய அலுவலகத்தில் வீட்டின் உரிமையாளர் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மின்வாரிய உதவி என்ஜினீயர் கேசவ் பாண்டுரங் (வயது52) விட்டின் உரிமையாளிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனடியாக மின்மீட்டர் பொருத்த அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கொடுத்த யோசனையின்படி நேற்று மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி என்ஜினீயர் கேசவ் பாண்டுரங்கிடம், வீட்டின் உரிமையாளர் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி என்ஜினீயரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story