ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கைது
புனேயில் ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
புனே,
புனேயில் ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்புனே அங்கித் வார்ஜே மால்வாடி போலீஸ் நிலையத்தில் பெண் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சப்னா(வயது 27). சமீபத்தில் அதே பகுதியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் அங்கித் வார்ஜே மால்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த சப்–இன்ஸ்பெக்டர் சப்னா, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றால் தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
கையும், களவுமாக சிக்கினார்இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த யோசனையின்படி அந்த பெண், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் சென்று சப்–இன்ஸ்பெக்டர் சப்னாவை சந்தித்து ரூ.37 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சப்–இன்ஸ்பெக்டர் சப்னாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.