தனி மீனவர் சங்கமாக பிரிந்து செயல்பட அனுமதி வழங்க கோரி மீனவர்கள் முற்றுகை
தனி மீனவர் சங்கமாக பிரிந்து செயல்பட அனுமதி வழங்க கோரி தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள திருவத்தேவன் ஊராட்சியில் உள்ளது சுப்பம்மாள்சத்திரம். இந்த ஊரை சேர்ந்த கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் துணைத்தலைவர்கள் அன்பு, சுப்பிரமணியன், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குத்புதீன், கிளை தலைவர் தயார்சுல்தான், செயலாளர் செய்யதுமுகமது ஆகியோர் முன்னிலையில் தஞ்சை கீழவாசலில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக சோமநாதன்பட்டினம் கடல் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறோம். 66 உறுப்பினர்கள் உள்ளோம். இன்னும் மீதமுள்ள மீனவர்களை நலவாரியத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து வருகிறார்கள். 4 மாதங்களுக்கு முன்பு கூட 11 பேருக்கு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் அட்டை கேட்டு மனு கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
நாங்கள் 16 நூலிழைப்படகுகள் வைத்திருக்கிறோம். அதற்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. 5 மீனவர்கள் மாத சேமிப்புபணம் கட்டி உள்ளோம். எங்களுக்கு சேமிப்பு பணம் கொடுக்கவும் இல்லை.
கட்டிய பணத்தை திருப்பி கொடுக்கவும் இல்லை. அதுவும் 26 மீனவர்களிடம் தான் வசூலிக்கிறார்கள். மீதமுள்ள மீனவர்களிடம் வசூல் செய்வதில்லை. எங்கள் உறுப்பினர்கள் எல்லோரிடமும் பணம் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சோமநாதன்பட்டினம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் எங்களை முஸ்லிம்கள் என்பதால் பாகுபாடு காட்டி அனைத்து விதங்களிலும் புறக்கணிக்கிறார்கள். எனவே எங்களை பிரித்து சுப்பம்மாள்சத்திரம் கடல் மீனவர் சங்கமாக செயல்படவும், எங்களை பாதுகாத்துக்கொள்ள நலவாரியத்தில் இருந்து அனைத்து பயன்களையும் அடைய வழிவகுத்து தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story